search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தேனி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 76 பேருக்கு கொரோனா

    தேனி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதன்படி, தேனி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், தேனி ஆயுதப்படை பிரிவு பெண் போலீசின் தாய், 2 மகன்கள், சுப்பன்தெருவை சேர்ந்த 50 வயது பெண் என தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பழனிசெட்டிபட்டியில் தந்தை, மகள் மற்றும் 43 வயது பெண், அந்த பெண்ணின் மகன், மகள் ஆகியோர் உள்பட 10 பேருக்கும், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் அரண்மனைப்புதூரை சேர்ந்த பெண் மற்றும் அவருடைய கணவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

    பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் உள்பட 5 நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அங்கு பணியாற்றிய செவிலியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நோயாளிகளுக்கும் பாதிப்பு தொற்றியுள்ளது. அதுபோல், குள்ளப்புரம், அம்மச்சியாபுரம், தேவாரம் தம்மிநாயக்கன்பட்டி, கோவிந்தநகரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    கம்பம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ராயப்பன்பட்டியை சேர்ந்த செவிலியர், அணைப்பட்டியை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி மற்றும் க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, உத்தமபாளையம் ஆகிய ஊர்களில் தலா 2 பேருக்கும், சின்னமனூரில் 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

    கம்பத்தில் 78 வயது முதியவர், 65 வயது மூதாட்டி உள்பட 13 பேர், போடியில் 75 வயது மூதாட்டி, 18 வயது இளம்பெண் உள்பட 9 பேர், ஆண்டிப்பட்டியில் பெண் உள்பட 2 பேர், சக்கம்பட்டியில் 14 வயது சிறுவன், சிறுவனின் தாய், மற்றொரு 14 வயது சிறுவன், அவனுடைய அண்ணன் ஆகிய 4 பேர், பாப்பம்மாள்புரத்தில் 68 வயது முதியவர், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 52 வயது பெண் ஊழியர், க.விலக்கில் 25 வயது பெண், கடமலைக்குண்டு அருகே பாலூத்தில் 19 வயது வாலிபர் உள்பட 2 பேர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,225 ஆக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×