என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் மாவட்டத்தில் 3 அரசு டாக்டர்கள் உள்பட 23 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்8 July 2020 1:37 PM IST (Updated: 8 July 2020 1:37 PM IST)
திருவாரூர் மாவட்டத்தில் 3 அரசு டாக்டர்கள் உள்பட 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 553 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பணிபுரிந்து வந்த 3 பயிற்சி டாக்டர்கள் மற்றும் திருவாரூர், குடவாசல் பகுதி மருத்துவமனை செவிலியர்கள் ஆகியோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல் திருவாரூர் ஆயுதப்படை போலீசார் 2 பேர், திருத்துறைப்பூண்டி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மற்றும் காய்கறி கடை ஊழியர் ஒருவர், மன்னார்குடி பகுதியை சேர்ந்த 4 பேர் உள்பட 23 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று வரை 398 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதால் 178 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story
×