என் மலர்

  செய்திகள்

  சிறை (கோப்பு படம்)
  X
  சிறை (கோப்பு படம்)

  ஆந்திராவில் 13 சிறப்பு ஜெயில்கள்- கைதிகள் மூலம் வைரஸ் பரவலை தடுக்க அரசு நடவடிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திராவில் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்காக 13 சிறைச்சாலைகள் சிறப்பு சிறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
  ஐதராபாத்:

  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 6 நாட்களாக தினசரி தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 742417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20642 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் கைதிகள் மூலம் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், ஸ்ரீகாகுளம் மாவட்ட சிறை, விஜயநகரம் மாவட்ட சப்-ஜெயில் அனகாபள்ளி சப்-ஜெயில், காக்கிநாடா சப்-ஜெயில், மச்சிலிபட்டினம் சப்-ஜெயில் உள்ளிட்ட 13 சிறைச்சாலைகள் கொரோனா பரிசோதனைக்கான சிறப்பு சிறைகளாக மாற்றப்பட்டுள்ளன.

  இந்த சிறப்பு சிறைகளில் அனைத்து ஆண் கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும். குற்ற வழக்குகள் மற்றும் பல்வேறு புகார்களில் புதிதாக கைது செய்யப்படும் நபர்கள் இந்த சிறப்பு சிறைகளில் அடைக்கப்படுவார்கள். அவர்களுக்கு அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்றால் அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சாதாரண சிறைகளுக்கு மாற்றப்படுவார்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் பாதுகாப்பாக கொரோனா மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். 

  இந்த சிறப்பு சிறைகளில் இருந்து எந்த கைதியும் தப்பிச் சென்றுவிடாமல் தடுப்பதற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை  சய்யும்படி டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.

  ஆந்திராவில் இதுவரை 21197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 252 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
  Next Story
  ×