search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்வு

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.
    திருப்பூர்:

    இந்தியாவில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய கால கட்டத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் உயர தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பாரப்பாளையம் மங்கலம் ரோட்டை சேர்ந்த 33 வயது ஆண், 32 வயது ஆண், பி.என்.ரோடு காமராஜர் நகரை சேர்ந்த 33 வயது பெண், அனுப்பர்பாளையம் காந்தி ரோட்டை சேர்ந்த 28 வயது ஆண், பல்லடம் கணபதிபாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த 17 வயது சிறுவன், பூமலூர் பசுமை நகரை சேர்ந்த 31 வயது ஆண், பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்த 24 வயது பெண், திருப்பூர் சோழிபாளையத்தை சேர்ந்த 25 வயது ஆண், சஞ்சய் நகரை சேர்ந்த 32 வயது ஆண், காங்கேயம் வனிதா கல்வி நிலையத்தை சேர்ந்த 24 வயது பெண், அனுப்பர்பாளையம் அமர்ஜோதிகார்டனை சேர்ந்த 27 வயது பெண், அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 26 வயது ஆண், ராயபுரத்தை சேர்ந்த 45 வயது ஆண், டி.பி.என். கார்டனை சேர்ந்த 37 வயது ஆண், மொரட்டுப்பாளையத்தை சேர்ந்த 12 வயது சிறுவன், சஞ்சய் நகரை சேர்ந்த 51 வயது ஆண் ஆகிய 16 பேர் ஆவர்.

    இவர்களுக்கு தற்போது மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 16 பேர் என்பதால், தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று 64 பேருக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் குன்னத்தூர் அருகே ஆதியூரை சேர்ந்த 74 வயது முதியவர் ஒருவர் மூட்டு எலும்பு முறிவு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் வார்டில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனாபரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×