search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலை வாங்கி தருவதாக கூறி 25 பேரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி - 3 பேர் கைது

    வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 25 பேரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி செய்த 2 பேர் மற்றும் கடத்தி மிரட்டியதாக வாலிபர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் கோவிந்தராஜனின் மகன்கள் பெருமாள் (வயது 51), ஆனந்தன் (50). இருவரும், பல்வேறு நபர்களிடம் தாங்கள் நகராட்சியில் அரசு அதிகாரிகளாக, உதவி இயக்குனர்களாக உள்ளதாக கூறி வந்தனர். தாங்கள் இருவரும், பலருக்கு நகராட்சி மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை ஒதுக்கி தருவதாக, அரசு வேலை வாங்கி தருவதாக, நகராட்சி கடைகளை குறைந்த வாடகைக்கு வாங்கி தருவதாக கூறி 25 பேரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. வீடு ஒதுக்கி தரவில்லை ஏமாற்றி வந்தனர்.

    இதுகுறித்து வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் தனது மகனுக்கு நகராட்சியில் கிளார்க் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.6 லட்சத்தை பெற்று ஏமாற்றி விட்டதாக கொடுத்த புகாரின்பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார், பெருமாள் மற்றும் ஆனந்தன் மீது பண மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து, அவர்களை இன்ஸ்பெக்டர் பேபி கைது செய்தார்.

    முன்னதாக முருகேசன் மகன் தினேஷ் (25) மற்றும் அவரின் கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து தங்களுக்கு தர வேண்டிய பணத்துக்காக பெருமாளை கடத்திச் சென்று மிரட்டல் விடுத்து, பின்னர் அவரை விடுவித்ததாகக் டிரைவர் பெருமாள் கொடுத்தபுகாரின் பேரில் முருகேசன் மகன் தினேசை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×