search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழகம்
    X
    அண்ணா பல்கலைக்கழகம்

    அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் - பல்கலைக்கழக பதிவாளர்

    அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து ஏழு நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,500-ஐ தாண்டிய நிலையில், கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

    தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்ததால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டது.

    சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு நாளை முதல் ஊரடங்கு முறையில் சில தளர்வுளை அறிவித்துள்ளது. இதனையடுத்து நாளை முதல் அண்ணா பல்கலைக் கழகம் வழக்கம் போல் செயல்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
     
    எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து பேராசிரியர்களும், ஊழியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்றும், பணிக்கு வாராதவர்கள் விடுப்பு எடுத்ததாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   CEG, MIT, SAP, ACT ஆகியவை வழக்கம் போல் செயல்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
    Next Story
    ×