search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிஆர்
    X
    பிசிஆர்

    தமிழகத்திற்கு மேலும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் வருகை

    கொரோனா வைரஸ் பரிசோதனையை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக, மேலும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளன.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பிசிஆர் கருவிகள் குறைவாக இருந்ததால் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நிலை இருந்தது. இதனையடுத்து தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து புதிய கருவிகள் வாங்கப்பட்டு பரிசோதனை விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

    தெற்கொரிய நிறுவனத்திடம் இருந்து கடந்த மாதம் 26-ம் தேதி 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்த நிலையில், இன்று மேலும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் 10 லட்சம் பிசிஆர் கருவிகளுக்கு ஆர்டர் தரப்பட்டது. தமிழக சுகாதாரத்துறையிடம் தற்போது 5.60 லட்சம் பிசிஆர் கருவிகள் இருப்பில் உள்ளன. 

    ஏற்கனவே ஆர்டர் தரப்பட்ட 15 லட்சம் பிசிஆர் கருவிகள் முழுவதுமாக தமிழகம் வந்தடைந்துள்ளது. இந்த கருவிகளை பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு, கொரோனா பரிசோதனையை மேலும் விரைவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×