search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா
    X
    நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா

    நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் புதிய நுழைவு வாசல்- கலெக்டர் தகவல்

    நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் புதிய நுழைவு வாசல் அமைக்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் அரசு சித்த மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கல்லூரியும், அதனுடன் இணைந்த ஆஸ்பத்திரியும் செயல்பட்டு வருகிறது. இதில் தென் மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் சித்த மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் கடந்த முறை சிக்குன் குனியா, டெங்கு போன்றவை பரவிய போது நிலவேம்பு குடிநீர் அதிகளவு வழங்கி நோயை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தது.

    இந்த ஆஸ்பத்திரி வளாகத்தை கொரோனா பரிசோதனை மையமாக மாவட்ட நிர்வாகம் மாற்றியது. இதற்காக அங்குள்ள கல்லூரி அறைகளை பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்களை தங்க வைத்திருந்தனர். ஆஸ்பத்திரி உள்ள கிழக்கு நுழைவு வாசல் பகுதியில் வெளிநோயாளிகள் பிரிவு மட்டும் செயல்பட்டு வந்தது. அங்கு வந்த நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள், தைலம் வழங்கப்பட்டு வந்தது. அத்தோடு நிலவேம்பு குடிநீர் பொடி, கபசுர குடிநீர் பொடியும் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அங்கிருந்து சிகிச்சை முடிவடையும் தருவாயில் இருந்த நோயாளிகளை சித்த மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்தனர்.

    இதையடுத்து வெளிநோயாளிகள் பிரிவு நிறுத்தப்பட்டு, நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்குவதும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சித்த மருத்துவ சிகிச்சை பெறுவோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சித்த மருத்துவத்தின் பங்கும் முக்கியமானது என்கிற போது, அந்த மருத்துவக் கல்லூரி, ஆஸ்பத்திரியை முடக்கி வைத்திருப்பது சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறுகையில், “சித்த மருத்துவ கல்லூரியில் கொரோனா நோயாளிகள் இருப்பதால் வெளிநோயாளிகள் பிரிவை செயல்படுத்த முடியாது. எனவே அதற்கு மாற்று ஏற்பாடாக, புதிதாக நுழைவு வாசல் அமைக்கப்பட்டு சித்த மருத்துவ பிரிவு செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் இந்த ஆஸ்பத்திரி மூடப்பட்டதால் பாதிப்பு எதுவும் இல்லை. ஏனென்றால் கொரோனா பரவத்தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை கொரோனா நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் நேரடியாகவும், பவுடராகவும் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
    Next Story
    ×