search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
    X
    கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

    சேலம் மாவட்டத்தில் 152 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

    சேலம் மாவட்டத்தில் 152 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 1,127 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 521 பேர் வரை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான நபர்கள் தங்கி இருந்த இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் கூறியதாவது:-

    மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிப்புகளும் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 152 இடங்களை கட்டுப்படுத்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய்தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழையாதவாறு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் முதியவர்கள் உள்ளனர். அவர்களை வீட்டில் உள்ளவர்கள் தனி அறையில் வைத்து கண்காணிக்க வேண்டும். கர்ப்பிணிகள் பிரசவ தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். நாளை(இன்று) முழு ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் அனைவரும் கடை பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×