என் மலர்

  செய்திகள்

  வைகோ
  X
  வைகோ

  தமிழர்களை மீட்டு அழைத்துவர அதிகளவில் விமானங்களை இயக்க வேண்டும்- வைகோ ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு அழைத்துவர அதிகளவில் விமானங்களை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வைகோ இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
  சென்னை:

  கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வேலை இழந்து விட்டனர். விமானங்கள் பறக்கத் தடை விதித்ததால், நாடு திரும்பவும் முடியவில்லை. அடுத்த வேளை உணவுக்கும் வழியின்றி, அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து நாட்களைக் கடத்தி வருகின்றனர்.

  இதனால் அயல்நாடு வாழ் தமிழர்கள் மீட்டுக்கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உடனே விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன் காக்க தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அண்ணாநகரில் உள்ள வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
  Next Story
  ×