search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரிடம் திமுக எம்பி, எம்எல்ஏக்கள் மனு கொடுத்தனர்
    X
    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரிடம் திமுக எம்பி, எம்எல்ஏக்கள் மனு கொடுத்தனர்

    கொரோனாவில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- திமுகவினர் மனு

    கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. எம்.பி.க்கள் கதிர்ஆனந்த், சி.என்.அண்ணாதுரை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருளிடம் மனு கொடுத்தனர்.
    திருப்பத்தூர்:

    தி.மு.க. எம்.பி.க்கள் கதிர்ஆனந்த், சி.என்.அண்ணாதுரை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, வில்வநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருளிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளான ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    பின்னர் கதிர்ஆனந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? தற்போது அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்? கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எத்தனை பேர்? மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு? தினமும் எத்தனை பேருக்கு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது? மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு எத்தனை பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்? மாவட்டத்தில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யும் வசதி எந்தெந்த அரசு மருத்துவமனைகளில் உள்ளது? மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்? கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எத்தனை பேர்? ஆகிய 9 கேள்விகள் மாவட்ட கலெக்டரிடம் கேட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சந்திரசேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×