search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

    ராணிப்பேட்டையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்- 8 பேர் கைது

    ராணிப்பேட்டையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிப்காட்(ராணிப்பேட்டை):

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, ஐ.என்.டி.யூ.சி, எல்.பி.எப், எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய, மாநில அரசின் தொழிலாளர், மக்கள், தேச விரோத கொள்கைகளை எதிர்த்து ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வேலை நேரத்தை 12 மணியாக அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்களை கைவிட வேண்டும், பாதுகாப்பு தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கம், விண்வெளி அறிவியல், அணு ஆலைகள், காப்பீடு வங்கி, ரெயில்வே உள்ளிட்டவைகளை தனியாருக்கு விற்கக்கூடாது, டேனரி, ஷூ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஊரடங்கு காலத்துக்கு முழுச்சம்பளம் வழங்க வேண்டும், ஊரடங்கால் வருமானம் இழந்த தொழிலாளர்களுக்கு வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் ஈட்டாத குடும்பங்கள் அனைத்தும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு தலா ரூ.7 ஆயிரம் வீதம் ரூ.22 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    ஊரடங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சி.ஐ.டி.யூ. மாநில துணைத் தலைவர் பாபு, தொ.மு.ச. மாவட்ட தலைவர் வையாபுரி, ஏ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சங்கர் மேஸ்திரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எல்.சி.மணி உள்பட 8 பேரை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×