search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்- குடோன் உரிமையாளர் கைது

    குமாரபாளையத்தில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக குடோன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதிகளில் குடோன் அமைக்கப்பட்டு அங்கிருந்து பள்ளிபாளையம், திருச்செங்கோடு, சங்ககிரி, பவானி, குமாரபாளையம் போன்ற பகுதிகளுக்கு புகையிலை பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மேட்டுக்கடை என்ற இடத்தில் ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த குடோனில் புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அந்த குடோனின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.

    இதுபற்றி குமாரபாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குடோன் உரிமையாளர் குமாரபாளையம் மேற்கு காலனியை சேர்ந்த பூபதி (வயது 48) என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    Next Story
    ×