search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன் மாணிக்கவேல்
    X
    பொன் மாணிக்கவேல்

    முன்னாள்சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மருத்துவமனையில் அனுமதி

    ஓய்வு பெற்ற முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    ஓய்வு பெற்ற முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் உள்ள சிலைகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக தமிழக அரசு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி-யாக பொன் மாணிக்கவேலை நியமித்தது. இவர் சிறப்பாக செயல்பட்டு பல சிலைகளை கண்டுபிடித்தார். அரசியல், பண பலம் ஆகியவற்றை எதிர்த்து சிறப்பாக செயல்பட்டார்.

    பின்னர் ஆவணங்களை உயர் அதிகாரிகளுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டால் ஓய்வு பெற்றவுடன் தமிழக அரசு இவரது பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை. ஆனால் உயர்நீதிமன்றம் இவரது பதவிக்காலத்தை நீட்டிக்க உத்தரவிட்டது. பின்னர் வழக்கு தொடர்பான அவணங்களை கோர்ட்டில் சமர்பித்த பின்னர் ஓய்வு பெற்றார்.

    இந்நிலையில், பொன் மாணிக்கவேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஐஜி பொன் மாணிக்கவேல் 1958-ம் ஆண்டு பிறந்தார். 1989-ம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக தேர்வு பெற்று, தமிழக காவல் துறையில் நேரடி டிஎஸ்பியாக சேர்ந்தார். பின்னர் 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதில் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெற்றார். சேலம் மாவட்ட எஸ்பி, உளவுப்பிரிவு டிஜஜி, சென்னை மத்திய குற்ற பிரிவு இணை ஆணையர், ரயில்வே மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி என தான் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும் கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்தார்.

    அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையுடன் கோயில் சிலைகள் கொள்ளை போனதை கண்டு பிடித்து அதில் தொடர்புடையவர் மீதும் வழக்கு தொடர்ந்து நடவ டிக்கை எடுத்தார். தஞ்சை பெரிய கோயிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் உலகமா தேவி சிலைகளை குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்தும், நடராஜர் சிலைகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத் தில் இருந்தும் மீட்டு கொண்டு வந்தார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் பல்வேறு தடைகளை கடந்து இவர் எடுத்த நடவடிக் கைகளை, வேறு எந்த அதிகாரியாலும் எடுக்க முடியாது என்ற நிலைக்கு பொன்.மாணிக்கவேலின் செயல்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×