search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கிலியான் கோவில் அணை
    X
    சங்கிலியான் கோவில் அணை

    சாணார்பட்டி பகுதியில் கனமழை : 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சங்கிலியான் கோவில் அணை

    தொடர்ந்து பெய்த மழை காரணமாக சங்கிலியான் கோவில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணை 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
    கோபால்பட்டி:

    சாணார்பட்டியை அடுத்த அஞ்சுகுளிப்பட்டியில் சங்கிலியான் கோவில் அணை மூலம் சாணார்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல ஏக்கரில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சிறுமலையில் இருந்து மழைக்காலங்களில் ஓடைகளில் பெருக்கெடுத்து வரும் மழைநீரை தடுத்து நிறுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் பொதுப்பணித்துறையினரால் கடந்த 2009-ம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. 20 அடி உயரம் கொண்ட இந்த அணை, 10 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதி கொண்டதாகும். ஆனால் இந்த அணை கட்டப்பட்ட முதல் ஆண்டில் மட்டுமே பலத்த மழையால் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அதன் பிறகு வறட்சி மற்றும் போதிய மழை இல்லாததால் அணை நிரம்பவில்லை.

    இந்தநிலையில் சாணார்பட்டி, சிறுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்தது. அவ்வப்போது கனமழையும் பெய்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக சங்கிலியான் கோவில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணை 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் சாணார்பட்டி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    Next Story
    ×