search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் சிறை வார்டன் உள்பட 11 பேருக்கு கொரோனா

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரையில் இருந்து கிருஷ்ணகிரி கிளை சிறைக்கு பணி மாறுதல் பெற்று வந்த 38 வயது பெண் வார்டன் பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 29-ந் தேதி கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதேபோல் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தில் குடியிருக்கும் 49 வயது ஆணுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குஜராத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவத்தவாடிக்கு வந்த 33 வயது ஆணுக்கும், மதுரையில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த ஊத்தங்கரையை சேர்ந்த 63 வயது முதியவருக்கும், சென்னை திருவாரூரில் பணியாற்றிவிட்டு பேகப்பள்ளியை சேர்ந்த 29 வயது ஆணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    மேலும் பெங்களூரு மருந்து கம்பெனியில் பணியாற்றி வரும் ஓசூர் விவேகானந்தா நகரை சேர்ந்த 26 வயது ஆணுக்கும், கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த ஓசூர் கிரேப்ஸ் கார்டனை சேர்ந்த 10 வயது சிறுமிக்கும், ஓசூரை சேர்ந்த 66 வயது முதியவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்கோட்டையில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட 20 வயது வாலிபர் இவருடைய உறவினர்களான 26 மற்றும் 25 வாலிபர் ஆகிய 3 பேர் கிருஷ்ணகிரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வாலிபர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இவர்கள் 11 பேருக்கும் கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×