search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.
    X
    பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

    கிராமப்புறங்களில் கோவில்கள் திறப்பு - பக்தர்கள் சாமி தரிசனம்

    கிராமப்புறங்களில் உள்ள கோவில்கள் திறக்கப் பட்டதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    பெரம்பலூர்:

    இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு தற் போதும் நடைமுறையில் உள் ளது. இதில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. ஆனால் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும், மற்ற கோவில்களும் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதியே மூடப்பட்டன. இதனால் கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் மட்டும் பக்தர்களின்றி நடைபெற்று வந்தது. இந்நிலையில் 6-வது முறையாக அமல்படுத்தப் பட்ட ஊரடங்கு நீட்டிப் பில் தமிழகத்தில் கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்ட மாவட்ட கிராமங்களில் உள்ள சிறிய கோவில்கள், ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவாக வரும் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சிறிய பள்ளி வாசல்கள், தர்காக்களை திறக்க அரசு உத்தரவிட்டது.

    அதன்படி பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட கிராமப்புறங்களில் உள்ள கோவில்கள், பள்ளி வாசல்கள், தர்காக்கள் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட் டனர். 103 நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற தால் மகிழ்ச்சியடைந்த பக்தர் கள் கோவிலுக்குள் அரசு வழிக்காட்டுதலின்படி முக கவசம் அணிந்து வந்தனர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து பயபக்தியுடன் சாமியை தரிசனம் செய்தனர். சில கோவில்களில் பக்தர்கள் அரசு வழிக்காட்டு தலை பின்பற்றவில்லை. மேலும் கிராமப்புறங்களில் உள்ள சில கோவில்கள் வாரத்தில் செவ் வாய், வெள்ளிக்கிழமை மற்றும் முக்கிய விஷேச நாட்களில் மட்டும் திறக் கப்படுவ தால், அவைகள் நேற்று திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×