என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  தேனி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண் கொரோனாவுக்கு பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி சீத்தாராம்தாஸ் நகரை சேர்ந்த 52 வயது பெண் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
  தேனி:

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி சீத்தாராம்தாஸ் நகரை சேர்ந்த 52 வயது பெண் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இந்த பெண்ணுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த வாரம் அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

  அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடந்த 27-ந்தேதி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இதன்மூலம் தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் கம்பத்தை சேர்ந்த தங்கும் விடுதி உரிமையாளர் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அதற்கு முன்பாக ஓடைப்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவரும், போடியை சேர்ந்த ஒரு பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் மக்களிடம் அச்சம் அதிகரித்து உள்ளது.
  Next Story
  ×