search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    திருவாரூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 13 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 468 ஆக உயர்வு

    திருவாரூர் மாவட்டத்தில் டாக்டர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 468 ஆக உயர்ந்துள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். மே மாதத்தில் 17 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் ஜூன் மாதத்தில் 409 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த 3 மாதங்களில் மாவட்டத்தில் மொத்தம் 455 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் பாதிப்பு அதிகரிப்பதால் மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு, ‘இ-பாஸ்’ வைத்திருப்பவர் களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் நோய் தொற்று காரணமாக 26 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சுகாதாரத்துறையினர் கண் காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று குடவாசல் அரசு மருத்துவ மனையில் பணியாற்றிய டாக்டர் ஒருவர், அறுவை சிகிச்சை அறை டெக்னீசியன் ஒருவர், மன்னார்குடி கோபாலசமுத்திரம் கீழவீதி யில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரியும் ஊழியர், திருவாரூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர், கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 2 பேர், பெருகவாழ்ந் தான் பகுதியை சேர்ந்த 4 பேர் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 468 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மன்னார்குடியில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதை தொடர்ந்து அவர் பணியாற்றி வந்த வங்கி கிளைக்கு சென்ற மன்னார்குடி நகராட்சி ஆணையர் திரு மலைவாசன், மன்னார்குடி தாசில்தார் கார்த்திக் உள் ளிட்ட அதிகாரிகள் வங்கி கிளையை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

    மேலும் அந்த ஊழியர் காந்தி ரோட்டில் உள்ள வங்கியின் மற்றொரு கிளைக்கு சென்று வந்ததால் அந்த கிளையும் மூடப்பட்டது. வங்கி ஊழியர்கள் அனை வருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித் தனர்.
    Next Story
    ×