search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன்
    X
    பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன்

    பரமக்குடி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
    ராமநாபுரம்:

    தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 952 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 243 பேர் கொரோனாவுக்கு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இந்நிலையில் இன்று பரமக்குடி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனின் மனைவி, மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×