search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்த திமுக நிர்வாகிகள்
    X
    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்த திமுக நிர்வாகிகள்

    கொரோனா உறுதி செய்யப்பட்டும் சிகிச்சை கிடைக்கவில்லை... வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு உதவி செய்த திமுக

    சென்னை பாடியைச் சேர்ந்த பெண், தனக்கு கொரோனா சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், அவருக்கு திமுக மருத்துவ உதவி செய்தது.
    சென்னை:

    சென்னை பாடியைச் சேர்ந்த ரஜினி பிரியா என்ற பெண், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும் தனக்கு இரண்டு நாட்களாக எந்த உதவியும் செய்யவில்லை என்று வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அவரை உடனடியாக தொடர்பு கொண்டு பேசி, உரிய மருத்துவ உதவி கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அதன்படி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பாக, அவருக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. சிகிச்சைக்கும் உதவி செய்யப்பட்டது.

    இதுபற்றி திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்டிஆர் நாகராஜ் கூறியிருப்பதாவது:-

    பாடி ரஜினி பிரியா என்ற பெண் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ மிகவும் வைரலாகி வந்தது. அதாவது இவர் கொரோனா நோயாளி என்றும் தனக்கு இரண்டு நாட்களாக அரசின் தரப்பில் எந்த உதவியும் செய்யவில்லை என்று, மேலும் அவருக்கு தனது தீராத தலைவலியும் சளியும் இருப்பதால் எந்தவித மருத்துவ உதவி பெறவில்லை, எந்த மருந்தகத்திற்கு சென்றாலும் தலைவலி மருந்து சளி மருந்து தர மறுக்கின்றனர், அதனால் மிகவும் சிரமப்படுவதாக கூறியிருந்தார். 

    இந்த வீடியோ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வைக்கு வந்தவுடன் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு அவருக்கு உதவுவதாக உறுதி அளித்து, உடனடியாக அம்பத்தூர் தொகுதியின் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பிகே சேகர்பாபு எம்எல்ஏ அவர்களை தொடர்பு கொண்டு உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவ வேண்டுமென்று கூறினார்.

    அதனடிப்படையில் உடனடியாக சேகர்பாபு எம்எல்ஏ அவர்கள், அந்த பெண்ணுக்கு தலைவலி மாத்திரை, சளி மாத்திரை, சத்து மாத்திரை மற்றும் மாஸ்க் அவற்றை ஏற்பாடு செய்து அதை  வழங்க அந்தப் பெண்ணிற்கு உடனடியாக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்டிஆர் நாகராஜ் மற்றும்  மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ஜி சாந்தகுமாரி ஆகியோர்கள் மூலமாக அனுப்பி அவருக்கு  வழங்கினார்கள்

    திமுக  தலைவர் தளபதி அவர்களுக்கு அந்தப் பெண் நன்றி சொன்னார். மேலும் இன்று காலை அந்த பெண்ணை மறுபடியும் ஐஐடி அம்பத்தூர் அழைத்து சென்று டெஸ்ட்டுகள் எடுத்து அவரை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவருக்கு சிகிச்சையை துரிதமாக செய்தனர்.

    எதிர்க்கட்சித் தலைவர் தலையிட்டு, அதனால் ஆளுங்கட்சியினர் உடனடியாக இரண்டு நாட்கள் கவனிக்க முடியாத கொரானா நோயாளியை கவனிக்கின்றனர். 

    மேலும் இந்தப் பெண் அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லவில்லை. அம்பத்தூரில் உள்ள உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் கொரானா  ரத்தப் பரிசோதனைக்கு கொடுத்தார். மேலும் அவரது ஆதார் கார்டு மூலமாக அவருடைய விலாசம் பதியப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமியாரை அரசு அதிகாரிகளை அணுகி அவரை பரிசோதனைக்கு எப்படி அழைத்து சென்றனர்? அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் எதனடிப்படையில் அவர்களின் உறவினர்களை பரிசோதனைக்கு கூட்டி சென்றனர்? அவர் எந்த இடத்திலும் தான் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறியதில்லை. 

    மேலும் நேற்றைய வைரல் காரணமாக இன்று அவர் மீது தவறான அவதூறுகள் சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. ஒரு சாதாரண சாமானியன் குரல் கொடுத்தால், அவனை அடித்து மிதித்து அவன் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்பதற்கு இதுவே இதற்கு சாட்சி.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×