search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவல் நிலையம்
    X
    காவல் நிலையம்

    போலீஸ் நிலையங்களில் புகார்தாரர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

    தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்தாரர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவிட்டுள்ளார்.
    தர்மபுரி:

    சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை-மகன் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் போலீஸ் நிலையங்களில் போலீசார் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பொதுமக்களையும், புகார் கொடுக்க வருபவர்களையும் நடத்த வேண்டிய விதம் குறித்து உயர் அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.

    இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். இதன்படி போலீஸ் நிலையங்களில் தேவையில்லாமல் பலர் கூடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட புகாரை கொடுக்க ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யும்போது போலீஸ் நிலையங்களில் புகார்தாரர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். சிறிய அளவிலான புகார்கள் குறித்து புகாரை பெற்றுக்கொண்டதற்கான சி.எஸ்.ஆர். பதிந்து விசாரிக்க வேண்டும். புகார்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் அதுதொடர்பாக விசாரணையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். போலீஸ் நிலையங்களில் புகார் மற்றும் விசாரணைக்கு தொடர்பில்லாத நபர்கள் நுழைவதை அனுமதிக்ககூடாது. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×