search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    ராமநாதபுரம், சிவகங்கையில் 92 பேருக்கு கொரோனா

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உள்பட 2 பேர் பலியாகினர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 863 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கழனிக்குடியில் 28 வயது நபர், பட்டணம்காத்தான் வேல்நகரில் 35 வயது நபர், நயினார்கோவில் சிறுவயலில் 26 வயது பெண், ராமநாதபுரம் செம்மண்குண்டு தெரு 41 வயது பெண், கிழக்கு கடற்கரை சாலை ரோடு பகுதி 30 வயது பெண், சவேரியர் தெரு 52 வயது நபர், சேதுபதி நகர் 46 வயது நபர், ஆதம்நகர் 25 வயது பெண், பரமக்குடி பகவத்சிங் ரோடு 76 வயது நபர், ராமநாதபுரம் மாவட்ட சிறை காவலர் 27 வயது நபர், பரமக்குடி மல்லக்குளம் 55 வயது நபர், ராமநாதபுரம் மதுரையார்தெரு 25 வயது பெண், நாகலிங்க பிள்ளை தெரு 55 வயது நபர், சீனாங்குடி 21 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    ராமநாதபுரம் புதுஅக்ரகாரம் 32 வயது நபர், வண்டிக்காரத்தெரு 20 வயது நபர், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் 28 வயது பெண், காவலர் குடியிருப்பு 33 வயது பெண் காவலர், கீழக்கரை 54 வயது நபர், ராமநாதபுரம் 4 வயது சிறுவன், கீழக்கரை 54 வயது நபர், உப்பளங்குளம் 20 வயது பெண், தேவிபட்டினம் வடக்குத்தெரு 21 வயது பெண், முள்ளிமுனை 23 வயது பெண், முதலூர் 28 வயது பெண், ராமநாதபுரம் 22 வயது பெண், ராமேசுவரம் சேராங்கோட்டை 23 வயது பெண், பெரியபட்டணம் வடக்குத்தெரு 22 வயது பெண், வடக்கு மென்னந்தி 45 வயது பெண் என மொத்தம் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 892 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல ராமநாதபுரம் செட்டியார் தெருவை சேர்ந்த 68 வயது நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 63 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிவகங்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 143 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 14 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

    இவர்களை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள், உதவி நிலைய அலுவலக மருத்துவர்கள் முகமதுரபீ, மிதுன், மருத்துவ கல்லூரி சித்தா பிரிவு டாக்டர் காந்திநாதன், யோகா பிரிவு டாக்டர் தங்கம்சீனிவாசன், சமூக ஆர்வலர் அயோத்தி மற்றும் டாக்டர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×