search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா உணவகம்
    X
    அம்மா உணவகம்

    அம்மா உணவகங்களில் 5-ந்தேதி வரை விலையில்லாமல் உணவு

    சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முதல் 5-ந்தேதி வரை விலையில்லாமல் உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல் 30-ந்தேதி (நேற்று) வரை வழங்கப்பட்டு வந்தது. சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும், தீவிர ஊரடங்கு கடந்த 19-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டதால், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டிருந்தேன்.

    மேற்கண்ட பகுதிகளில் வருகிற 5-ந்தேதி வரை தீவிர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இக்காலக்கட்டத்தில், இப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு சமையல் செய்து, இந்த உணவை விலையில்லாமல், தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன். இந்த நடைமுறை 1-ந்தேதி (இன்று) முதல் 5-ந்தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×