search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 63 பேருக்கு கொரோனா - கமுதி முதியவர் பலி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 737 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அதாவது, ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூர் சதாம்உசேன் தெருவில் 62 வயது நபர், ஆர்.எஸ்.மங்கலம் பாரனூரில் 27 வயது நபர், ஆர்.எஸ்.மங்கலம் ரெத்தினம் மகால் பகுதியில் 41 வயது நபர், தர்மமுனீஸ்வரர் தெருவில் 28 வயது பெண், எருமை பட்டி பகுதியில் 39 வயது நபர், ராமநாதபுரம் மோர்க்கடை பகுதியில் 42 வயது பெண், முத்து கோரக்கி செட்டிய தெருவில் 52 வயது நபர், கீழக்கரையில் 38 வயது நபர், 55 வயது பெண், ராமநாதபுரம் தில்லையம்மாள் தெருவில் 57 வயது பெண், ஆர்.காவனூர் பகுதியில் நிறைமாத கர்ப்பிணி, ராமநாதபுரத்தில் 49 வயது நபர், சக்கரக்கோட்டையில் 66 வயது நபர், கீழக்கரையில் 36 வயது நபர், பரமக்குடியில் 23 வயது பெண், 26 வயது நபர், சத்திரக்குடி அம்பேத்கர்காலனியில் 55 வயது பெண், மென்னந்தியில் 30 வயது நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கடலாடி வெட்டுக்காடில் 30 வயது பெண், சாயல்குடி மெயின்ரோட்டில் 40 வயது நபர், கடலாடி அல்லிக்குளத்தில் 30 வயது நபர், அவரின் மனைவி, கன்னிராஜபுரம் 25 மற்றும் 27 வயது பெண்கள், கடலாடி நரிக்கூட்டம் பகுதியில் 47 வயது நபர், கடலாடி வி.எம்.வி. நகரில் 34 வயது நபர், பரமக்குடி காந்திஜி ரோட்டில் 34 வயது நபர், புதுமடம் நடுத்தெருவில் 37 வயது நபர், கீழக்கரை கிழக்குத்தெருவில் 39 வயது மற்றும் 67 வயது நபர், கீழக்கரை புதுகிழக்குத்தெருவில் 44 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுதவிர, ராமநாதபுரத்தில் 31 வயது நபர், மண்டபம் ரெயில்வே காலனியில் 27 வயது நபர், ராமேசுவரம் ரெயில்நிலையம் அருகில் 24 வயது நபர், 28 வயது நபர், 31 வயது பெண், 28 வயது நபர், ராமேசுவரம் 25 வயது நபர், 24 வயது நபர், பரமக்குடி எஸ்.எஸ்.கோவில் தெரு 55 வயது நபர், அவரின் மனைவி, மகன், 26 வயது மகள், வைசியர்தெரு 39 வயது பெண், இ.பி.ஜி. தெரு 83 வயது முதியவர், அவரின் மனைவி, மகன், ஜி.வி. பந்த் தெரு 40 வயது நபர், எஸ்.எம். அக்ரகாரம் 38 வயது நபர், பரமக்குடி கண்ணகி தெரு 21 வயது பெண், கமுதக்குடி 21 வயது பெண், அண்டக்குடி 25 வயது பெண், மஞ்சப்பட்டினம் புதுநகர் 52 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பரமக்குடி காளிதாஸ்தெரு 59 வயது நபர், அவரின் மனைவி, பாரதிநகர் 65 வயது நபர், பரமக்குடி திருவரங்கம் 38 வயது நபர், சந்தைக்கடை 65 வயது நபர், பரமக்குடி காவலர்குடியிருப்பு நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 56 வயது நபர், பரமக்குடி எஸ்.எஸ்.கோவில்தெரு 42 வயது நபர், பரமக்குடி ராமலிங்க அடிகளார்தெரு 50 வயது நபர், மணிநகர் 48 வயது நபர், 65 வயது நபர் ஆகிய 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்தது.

    மெலும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கொத்த பூக்குளம் பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவரின் மகன் போஸ்(வயது60) என்பவர் கொரோனா தொற்று காரணமாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    Next Story
    ×