search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் - கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதிகளவில் பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலமாக மட்டுமே தொற்று அறிந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் போது தொற்று மேலும் அதிகளவில் பரவாமல் தடுக்க இயலும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, செய்யாறு, ஆரணி, செங்கம், போளூர், தானிப்பாடி, வந்தவாசி, கலசபாக்கம், சேத்துப்பட்டு, தண்டராம்பட்டு, வெம்பாக்கம் ஆகிய அரசு மருத்துவமனைகள், காட்டாம்பூண்டி, வாணாபுரம், மேல்பள்ளிப்பட்டு, காரப்பட்டு, ஜமுனாமரத்தூர், கொம்மனந்தல், களம்பூர், கடலாடி, மங்கலம், கீழ்பென்னாத்தூர், எஸ்.வி.நகரம், தச்சூர், நாவல்பாக்கம், பெங்கட்டூர், ஆக்கூர், வழுர், தெள்ளார், கொழப்பலூர் ஆகிய வட்டார சுகாதார நிலையங்களிள் என 29 மையங்களில் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை கொரானோ தொற்று பரிசோதனை செய்யலாம்.

    எனவே சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் தங்களுக்கு அருகாமையில் உள்ள கொரோனா தொற்று பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×