search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை
    X
    பெட்ரோல், டீசல் விலை

    தொடர்ந்து ஏறுமுகம்: பெட்ரோல் விலை ரூ.83-ஐ தொட்டது

    பெட்ரோலை விட, டீசல் தான் அதிகளவில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து இந்த நிலையில் தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து, ரூ.81, ரூ.82 என்ற விலையை கடந்து தற்போது ரூ.83 ஆக இருக்கிறது.
    சென்னை :

    ஒவ்வொரு நாளும் விலை மாற்றத்துடன் பெட்ரோல், டீசல் இருந்து வருகிறது. 82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ந்தேதி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. அதன்பின்னரும் தொடர்ந்து விலை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்த தொடர் விலை உயர்வால், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80-ஐ கடந்தது.

    இந்த நிலையில் தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து, ரூ.81, ரூ.82 என்ற விலையை கடந்து தற்போது ரூ.83 ஆக இருக்கிறது. நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 83 ரூபாய் 4 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 47 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 76 ரூபாய் 77 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    பெட்ரோலை விட, டீசல் தான் அதிகளவில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. விலை உயர்வை சந்தித்து வரும் கடந்த 17 நாட்களில் மட்டும் பெட்ரோல் 7 ரூபாய் 50 காசும், டீசல் 8 ரூபாய் 55 காசும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×