search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான ஆடுகள்
    X
    பலியான ஆடுகள்

    திண்டுக்கல் அருகே தீயில் கருகி 12 ஆடுகள் உயிரிழப்பு

    திண்டுக்கல் அருகே கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி இறந்தன.
    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே அகரம் பேரூராட்சிக்குட்பட்ட கஸ்தூரிபாபுரத்தை சேர்ந்தவர் சின்னையன். இவர் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் அவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அதன்பிறகு மதியம் 12 மணி அளவில் கொட்டகையில் ஆடுகளை அடைத்துவிட்டு, சாப்பிடுவதற்காக வீட்டிற்குள் சென்றுவிட்டார். அவரது ஆட்டுக்கொட்டகை ஓலை கூரையால் வேயப்பட்டிருந்தது. மேலும் அந்த ஆட்டுக்கொட்டகையின் அருகில் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது.

    இந்தநிலையில் அந்த டிரான்ஸ்பார்மரில் திடீரென்று தீப்பொறி ஏற்பட்டது. அது ஆட்டுக்கொட்டகையின் மீது விழுந்து மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதில் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் தீயில் இருந்து தப்பிக்க கத்தியபடி அங்குமிங்கும் ஓடின. இதற்கிடையே ஆடுகள் கத்தும் சத்தம் கேட்ட சின்னையன், கொட்டகையில் எரிந்த தீயை அணைக்க போராடினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி கொட்டகையில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி இறந்தன. மேலும் 12 ஆடுகள் காயம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷேக் தாவூத், சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பாப்பனம்பட்டி கால்நடை மருத்துவ அலுவலர் முத்துசாமிபாண்டியன் தலைமையிலான கால்நடை மருத்துவர்கள், சம்பவ இடத்திற்கு வந்து தீயில் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
    Next Story
    ×