search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசி
    X
    காசி

    5 நாள் விசாரணைக்கு பிறகு காசி, நண்பர் மீண்டும் சிறையில் அடைப்பு

    5 நாள் போலீஸ் காவல் விசாரணைக்கு பிறகு காசி மற்றும் அவரது நண்பரை சி.பி.சி.ஐ.டி போலீசார் சிறையில் அடைத்தனர்.
    நாகர்கோவில்:

    சமூக வலைதளம் மூலம் சென்னை பெண் டாக்டர் உள்பட ஏராளமான இளம் பெண்களுடன் பழகி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். பாலியல் விவகாரத்தில் சிக்கிய காசி மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. மேலும், காசிக்கு உறுதுணையாக இருந்த அவருடைய நண்பர் நாகர்கோவிலை சேர்ந்த டேசன் ஜினோ என்பவர் கைது செய்யப்பட் டார். வெளிநாட்டில் உள்ள மற்றொரு நண்பரை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காசியின் விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, காசி மீதான 6 வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். இதனை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறையில் உள்ள காசி, டேசன் ஜினோ ஆகிய 2 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    காசி மற்றும் அவரது நண்பர் டேசன் ஜினோ அகிய 2 பேரையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட சென்னை பெண் டாக்டர், நாகர்கோவில் பெண் என்ஜினீயர் உள்பட 5 பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டன. அந்த விவரங்களை கொண்டு காசி, டேசன் ஜினோவிடம் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அளித்த சில முக்கிய தகவல்களை போலீசார் பதிவு செய்தனர். இதில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெயரும் இடம் பெற்றதாக தெரிகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் கணேசபுரத்தில் உள்ள காசி வீட்டுக்கு அவரை அழைத்து சென்று, பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் சுமார் 3 மணி நேரம் வரை தீவிர விசாரணை மேற்கொண்டனர். காசியின் தனி அறையை போலீசார் சோதனை செய்தனர். ஆனால் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

    நேற்றுடன் போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பலத்த பாதுகாப்புடன் காசி மற்றும் அவரது நண்பர் டேசன் ஜினோவை நேற்று மாலை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் இரவு 8 மணியளவில் நீதிபதி கிறிஸ்டியன் வீட்டில் காசி மற்றும் டேசன் ஜினோவை ஆஜர்படுத்தினர். இதையடுத்து இருவரும் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும் ஓரிரு நாளில் மீண்டும் இருவரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×