search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பாண்டியராஜன்
    X
    அமைச்சர் பாண்டியராஜன்

    ஊர் பெயர்கள் மாற்றிய அரசாணை வாபஸ்- அமைச்சர் தகவல்

    ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போலவே ஆங்கிலத்திலும் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படுவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போலவே ஆங்கிலத்திலும் அமைக்க அரசு கடந்த ஏப்ரலில் அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கை சமீபத்தில் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் பல ஊர்ப் பெயர்களை மாற்றி உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, சென்னையில் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, மல்லிகைச்சேரி, மயிலாப்பூர், ஆதம்பாக்கம் உள்பட தமிழகத்தில் 1,018 பெயர்கள் மாற்றப்பட்டன.

    இந்தநிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போலவே ஆங்கிலத்திலும் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படுகிறது. தமிழில் இருந்து ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்வதற்காக நிபுணர்களின் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினர் கருத்தும் கேட்கப்படும். இதுதொடர்பான புதிய அரசாணையை விரைவில் எதிர்பார்க்கலாம்.’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
    Next Story
    ×