search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூணாறு தலைப்பு அணை
    X
    மூணாறு தலைப்பு அணை

    திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்திற்காக மூணாறு தலைப்பு அணை திறப்பு

    குறுவை சாகுபடிக்கு மூணாறு தலைப்பு அணை திறக்கப்பட்டுள்ளதால் திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நீடாமங்கலம்:

    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து 16-ந்தேதி கல்லணை திறக்கப்பட்டது. கல்லணை தண்ணீர் நேற்று நீடாமங்கலம் அருகே உள்ள மூணாறு தலைப்பு அணையை வந்தடைந்தது. இதனையடுத்து திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்திற்காக மூணாறு தலைப்பு அணையை பொதுப்பணித்துறை வெண்ணாறு வடநிலக்கோட்டம் தஞ்சாவூர் செயற்பொறியாளர் தமிழ்செல்வன் திறந்து வைத்தார். அணையில் இருந்து 617 கன அடி நீர் வெண்ணாற்றிலும், 233 கன அடி நீர் கோரையாற்றிலும், 203 கன அடி நீர் பாமணியாற்றிலும் திறந்துவிடப்பட்டது. வெண்ணாற்று பாசனத்தின் மூலம் 94 ஆயிரத்து 219 ஏக்கர் நிலமும், கோரையாற்றின் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கர் நிலமும், பாமணியாற்றின் மூலம் 38 ஆயிரத்து 354 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். இந்த தண்ணீர் கடைமடை பகுதியை சென்றடைந்தவுடன் பாசன வாய்க்கால்கள் திறக்கப்படும். பெரிய வெண்ணாற்றில் கிடைக்கப்பெறும் தண்ணீரை கொண்டு 3 ஆறுகளிலும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.

    இதில் வெண்ணாறு வடிநில உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர்கள் தியாகேசன், கனகரத்தினம் மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். குறுவை சாகுபடிக்கு மூணாறு தலைப்பு அணை திறக்கப்பட்டுள்ளதால் திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×