search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.எஸ்.பாரதி
    X
    ஆர்.எஸ்.பாரதி

    ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீன் ரத்து ஆகுமா? காவல்துறை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

    ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
    சென்னை:

    தாழ்த்தப்பட்ட மக்களையும் நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் பேசியதாக அளித்த புகாரில், திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கடந்த மாதம் 23ம் தேதி கைது செய்யப்படடார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முதலில் மே 31ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர் ஜூன் 1ம்தேதி வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை  ரத்து செய்வதற்கு காவல்துறை காட்டும் அக்கறை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

    இந்நிலையில் இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். இன்று மதியம் விசாரணை முடிவைடைந்தது. இதையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்படப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.பாரதியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியிருப்பதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பிலும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆர்.எஸ்.பாரதி தரப்பிலும் வாதிடப்பட்டது.
    Next Story
    ×