search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    3 மாவட்டங்களில் கூடுதலாக ரூ.7 கோடிக்கு மது விற்பனை

    12 நாள் ஊரடங்குக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் 3 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூ.7 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில வாரங்களாக ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு நேற்று மட்டும் ஆயிரத்திற்குள் வந்துள்ளது.

    மேலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வருகிற 19-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 12 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

    இந்நிலையில் 12 நாள் ஊரடங்குக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூ.7 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

    19-ம் தேதி முதல் 12 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உள்ளதால் 3 மாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனை உயர்ந்துள்ளது.

    திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 300 டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூ.7 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

    வழக்கமாக நாளொன்றுக்கு ரூ.18 கோடிக்கு மதுவிற்பனையாகி வந்த நிலையில் ரூ.25 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 
    Next Story
    ×