search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சப்-கலெக்டரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்.
    X
    சப்-கலெக்டரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்.

    பொங்கலூர் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    பொங்கலூர் அருகே எரிவாயு குழாய் அமைக்க நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
    பொங்கலூர்:

    தமிழகத்தில் கோவை இருகூர் முதல் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு தேவணகொந்தி வரை ரூ.720 கோடி மதிப்பீட்டில் நிலத்தடியில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்ல விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    காரணம் இந்த திட்டத்திற்காக சுமார் 18 மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுவதுடன், அந்த நிலத்தில் விவசாயம் எதுவும் செய்ய முடியாது மற்றும் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளதும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பிற்கு காரணம். இந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்று கூடி கண்டியன் கோவில் ஊராட்சி, தங்காய்புதூரில் சப்-கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:-

    கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடத்த திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு விவசாயிகளை அதிகாரிகள் அழைத்திருந்தனர்.

    அன்று அங்கு சென்ற எங்களை தனித்தனியாக அழைத்தபோது நாங்கள் செல்ல மறுத்துவிட்டோம். இதைத்தொடர்ந்து திட்டத்தின் சிறப்பு அதிகாரி சப்-கலெக்டர் புஷ்பா மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நாங்கள் கூட்டத்திற்கு வரவில்லை என்று அறிக்கை தந்துள்ளதாக தெரிகிறது. எனவே பாரபட்சமாக நடந்து கொள்ளும் சப்-கலெக்டரின் செயலை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். எங்களிடம் கூட்டத்திற்கு சென்றதற்கான ஆதாரம் உள்ளது.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×