
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி விடுப்பில் சென்றார். இதையடுத்து அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘வேறு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் நான் விடுப்பில் இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தற்காலிக டீனாக அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு வெளியிட்ட அறிவிப்பில், ‘சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி விடுப்பில் சென்றிருப்பதால், அம்மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி இந்த பொருப்பை கூடுதலாக கவனிப்பார்.’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.