search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    பீலா ராஜேஷ் மாற்றம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

    சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்த நடவடிக்கை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

    பீலா ராஜேஷ் மாற்றத்தில் வேறு எந்த காரணமும் இல்லை. அவர் மாற்றப்பட்டது முழுக்க முழுக்க நிர்வாகம் சார்ந்த நடவடிக்கை.

    முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய 3 விஷயங்களை பின்பற்றினால் கொரோனா வைரஸ் வர வாய்ப்பில்லை. கொரோனாவில் யார் அரசியல் செய்தாலும், அவர்கள் மக்களால் தனிமைபடுத்தப்படுவார்கள். சூழலை பொறுத்து உரிய நேரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×