search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெட்டுக்கிளி
    X
    வெட்டுக்கிளி

    கலிங்கப்பட்டியில் காணப்பட்டது பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல- வேளாண்துறை விளக்கம்

    திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டியில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள், பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்றும் அவை சாதாரண வெட்டுக்கிளிகள் தான் என்றும் வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
    திருவேங்கடம்:

    திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டியில் மன்மதன், காளிராஜ் உள்ளிட்ட சிலரின் பருத்திக்காட்டில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக தங்கி பயிர்களை அழித்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தென்காசி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    அதன்பேரில் வேளாண் துறையினர் வெட்டுக்கிளிகளை பிடித்து, கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பினர். இதில், கலிங்கப்பட்டியில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள், பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்பதும், அவை சாதாரண வெட்டுக்கிளிகள் என்பதும் தெரியவந்ததாக வேளாண் துறையினர் தெரிவித்தனர். அவ்வாறு பூச்சிகள் தென்பட்டால் அசார் டிராக்டின் மற்றும் வேப்ப எண்ணெய் கரைசலை லிட்டருக்கு 3 மில்லிவீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம் எனவும் வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×