search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளிநாயக்கனூர்குட்டை தூர்வாரப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு இருப்பதை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
    X
    காளிநாயக்கனூர்குட்டை தூர்வாரப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு இருப்பதை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.

    நாமக்கல், புதுச்சத்திரம் பகுதிகளில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு

    நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளம் தூர்வாரும் பணிகள், கரை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடக்கமாக நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் ராசாம்பாளையம் ஊராட்சியில் ரூ.1 லட்சம் மதிப்பில் வரப்பு காட்டு குட்டை ஆழப்படுத்தப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு உள்ளதை கலெக்டர் பார்வையிட்டார்.

    அதை தொடர்ந்து சிங்கிலிப்பட்டி ஊராட்சி காளிநாயக்கனூர்குட்டை ரூ.1 லட்சம் மதிப்பில் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு உள்ளதையும், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் தாளம்பாடி ஊராட்சியில் வெங்கன் சரலை குட்டை ரூ.60 ஆயிரம் மதிப்பிலும், திருமலைப்பட்டி ஊராட்சியில் பாப்பன்பட்டி குட்டை ரூ.50 ஆயிரம் மதிப்பிலும் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு உள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

    இந்த ஆய்வின்போது நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர். 
    Next Story
    ×