search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.சி.ஆர். கருவி
    X
    பி.சி.ஆர். கருவி

    தென்கொரியாவில் இருந்து ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன

    கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்து மேலும் 1 லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் இன்று தமிழகம் வந்தன.
    சென்னை:   

    இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இதுவரை 2 லட்சத்து 86 ஆயிரத்து 579 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 102 பேர் பலியாகி உள்ளனர்.

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு 38 ஆயிரத்து 716  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 349 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமான அளவில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.

    பி.சி.ஆர். கருவி சோதனை


    கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சோதனைகளை விரைவுப்படுத்துவதற்காக தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்து இன்று மேலும் 1 லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் இன்று தமிழகம் வந்தன.  

    இந்த கருவிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தேவையின் அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்படும். இதனால் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும். வாரம் 1 லட்சம் என்ற அளவில் இதுவரை மொத்தம் 6 லட்சத்து 27 ஆயிரம் கருவிகள் வந்துள்ளதாக, தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக தமிழக அரசு ரேபிட் டெஸ்ட் கருவிகளை வர வழைத்தது. ஆனால் அது தவறான முடிவுகளை காட்டியதால் திருப்பி அனுப்பப்பட்டது.

    பி.சி.ஆர். என்பது ரேபிட் டெஸ்ட் போன்று இல்லை. முடிவு வருவதற்கு சற்று நேரம் ஆனாலும் சரியான முடிவுகளை காட்டக்கூடியது. 
    Next Story
    ×