search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
    X
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    கொரோனா சிகிச்சை பணிக்கு 2834 மருத்துவ பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு

    தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பணிக்கு 2834 மருத்துவ பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவப் பணியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதற்காக கூடுதல் மருத்துவப் பணியாளர்கள் அவ்வப்போது நியமிக்கப்படுகின்றனர். அவ்வகையில், தற்போது
    கொரோனா சிகிச்சை பணிகளுக்காக 2834 மருத்துவ பணியாளர்களை கூடுதலாக பணியமர்த்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    கொரோனா சிகிச்சை பணிகளுக்காக 1239 மருத்துவர்கள் உள்பட 2834 மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதாவது அரசுப் பணியில் இல்லாத 574 முதுநிலை மருத்துவ மாணவர்களை மாதம் 75000 ரூபாய் சம்பளத்துடன், மருத்துவமனைகளில் கூடுதல் பணியாளர்களாக நியமிக்க உத்தரவிட்டிருக்கிறார். 665 மருத்துவர்களை மாதம் 60000 ரூபாய் சம்பளத்துடன் நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.

    மாத ஊதியம் 15000 ரூபாய்  வீதத்தில் 365 ஆய்வக பணியாளர்கள், மாத ஊதியம் 12000 ரூபாய் வீதத்தில் 1230 பல்நோக்கு சுகாதார பணியாளர்களையும் நியமிக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். 2834 மருத்துவப் பணியாளர்களும் 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×