என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் அருகே மெக்கானிக் தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்8 Jun 2020 12:19 PM GMT (Updated: 8 Jun 2020 12:43 PM GMT)
ராமநாதபுரம் அருகே மெக்கானிக் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் சீதக்காதி கிழக்கு தெருவை சேர்ந்த தங்கபாண்டி மகன் சரவணன்(வயது 38). ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி கோமதி(31).
இந்த நிலையில் சரவணன் அடிக்கடி குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி கோபித்து கொண்டு நெல்லையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இதனால் சரவணன் மனைவியை தொடர்பு கொண்டு குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் வரமுடியாது என்று மறுத்துவிட்டாராம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து கோமதி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story
×