என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே வழக்கை விசாரிக்க சென்ற போலீஸ்காரரை தாக்கிய தந்தை- மகன் கைது
Byமாலை மலர்8 Jun 2020 9:46 AM GMT (Updated: 8 Jun 2020 9:46 AM GMT)
கோவை அருகே வழக்கை விசாரிக்க சென்ற போலீஸ்காரரை தாக்கிய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை கருமத்தம்பட்டி இலச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது48). இவரது தம்பி ஆறுமுகம்(45). இவர் கருமத்தம்பட்டி பெரியாண்டவர் கோவில் பகுதியில் தனது தாய், தந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சொத்து தொடர்பாக அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சக்திவேல் தனது மகன் பீரவின்குமார் என்பவருடன் சம்பவத்தன்று ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு ஆறுமுகத்திடம் சொத்து தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்.
இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சக்திவேலும், அவரது மகன் பீரவின்குமாரும் சேர்ந்து ஆறுமுகத்தின் வீட்டின் கண்ணாடி, கதவு உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி உடைத்தனர். இதுகுறித்து ஆறுமுகம் கருமத்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பணியில் இருந்த போலீஸ்காரர் பன்னீர் செல்வம் என்பவரை அங்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சென்று விசாரித்தார்.
அப்போது சக்திவேலும், பீரவின்குமாரும் சேர்ந்து போலீஸ்காரரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் அவரை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ்காரர் பன்னீர் செல்வம் கருமத்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு சக்திவேலும், பீரவினும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீஸ்காரரை பணி செய்யவிடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story
×