search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

    திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    திண்டிவனம் நாகலாபுரம் ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் ஜின்னா மகன் சித்திக் பாஷா (வயது 19). இவர் மேம்பாலம் கீழ் பகுதியில் புதுச்சேரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அவரது சட்டைப்பையில் இருந்த 300 ரூபாய் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட கிடங்கல் 2 அண்ணா தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் ராஜேஷ் (29), விஜயகுமார் மகன் அப்பு என்கிற ஆகாஷ் (19), அதே பகுதி ராஜன் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் அஜய் ராஜ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×