என் மலர்

  செய்திகள்

  யானைகள்
  X
  யானைகள்

  கொளத்தூர் வனப்பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தோனிமடுவு வனப்பகுதியில் இருந்து 4 யானைகள் கீமியான்காடு பகுதிக்கு வந்தன. அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தன.

  மேட்டூர்:

  சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கீமியான்காடு கிராமம் ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரகம் தோனிமடுவு வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் அதிகளவில் உள்ளன.

  இந்த யானைகள் தண்ணீர், உணவு தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களில் உள்ள பயிர்களை நாசப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வந்தனர்.

  யானைகள் விவசாய பயிர்களை நாசப்படுத்துவதை தடுக்க, விளை நிலங்களைச் சுற்றிலும் மின்சார வேலி அமைத்தும், அகழிகள் வெட்டியும் விவசாயிகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்தநிலையில் தோனிமடுவு வனப்பகுதியில் இருந்து 4 யானைகள் கீமியான்காடு பகுதிக்கு வந்தன. அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. விவசாயிகள் தாசியான், குமார், மயில்சாமி, ராம்ஜி, ஆகியோர் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்திருந்த பருத்தி, மஞ்சள், வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.

  சக்திவேல் என்பவரது தோட்டத்தில் மக்காச்சோள பயிர்களையும் நாசம் செய்தன. இதுபற்றி மேட்டூர் வனச்சரகத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

  Next Story
  ×