என் மலர்
செய்திகள்

கைது
மதுரையில் மாவோயிஸ்டு தீவிரவாதி கைது
மதுரையில் மாவோயிஸ்டு தீவிரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை பி.பி. குளத்தைச் சேர்ந்தவர் விவேக் (வயது 35). இவர் மாவோயிஸ்டு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உடையவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் விவேக் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது செல்லூர் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பாக போலீசாரிடம் விசாரித்தபோது விவேக்குக்கு மாவோயிஸ்டு தீவிரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த ஆண்டு மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில் இவர் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மத்திய-மாநில அரசுகளை விமர்சித்து பேசினார்.
எனவே தேசிய இறையாண்மையை மீறும் வகையில் மத்திய-மாநில அரசுகள் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக மாவோயிஸ்டு தீவிரவாதி விவேக்கை கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

Next Story