search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் முறைகேடு- 3 பூசாரிகள் சஸ்பெண்டு

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 பூசாரிகளை சஸ்பெண்டு செய்து கோவில் அறநிலையத் துறை உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.

    இங்கு பங்குனி, ஆடி, தை மாதங்களில் நடைபெறும் விழாக்களில் மக்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்வதுண்டு.

    இங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் அங்க வஸ்திரங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

    இந்நிலையில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய பொருட்கள் முறையாக கணக்கில் கொண்டு வரப்படுவதில்லை என வந்த புகாரையடுத்து கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அறநிலையத் துறை உதவி ஆணையர் கருணாகரன் ஆய்வு செய்தார். அப்போது 3 பூசாரிகள் கோவில் காணிக்கைப் பொருட்களை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த காட்சியின் அடிப்படையில் கோவில் பூசாரிகள் ராமர், கதிரேசன், அரிராம் ஆகிய 3 பேரை கோவில் பூஜை மற்றும் விழாக்களில் பங்குபெற தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    இவர்கள் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனரா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளை கோவில் அறங்காவலர் குழுவில் உள்ள பூசாரிகளே கையாடல் செய்து பங்கிட்டுக் கொள்ளும் செய்தி அறிந்து பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    Next Story
    ×