என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  பால் வியாபாரி, மனைவிக்கு கத்தி வெட்டு- 8 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராணிப்பேட்டையில் பால் வியாபாரி, மனைவி இருவரும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
  சிப்காட்(ராணிப்பேட்டை):

  ராணிப்பேட்டை சங்கர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா, பால் வியாபாரி. இவருடைய மனைவி ஜெரீனா. இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தனர். குடும்ப பிரச்சினையால், அதேபகுதியைச் சேர்ந்த உறவினர்கள் யாசின், ஆதம், ஆமின், அப்துல்காதர், பேகம்பீ, ஆமீனாபீ, பாமிதா பீ, பர்சானா ஆகியோர் அப்துல்லா வீட்டுக்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை கீழே தள்ளி கையால் தாக்கி உள்ளனர்.

  தகராறை தடுக்க வந்த அப்துல்லாவின் மனைவி ஜெரீனாவை, தாங்கள் கையில் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டினர். மேலும் ஜெரீனாவின் கையை உடைத்து, உங்களை ஒழிக்காமல் விடமாட்டோம், எனக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

  இதையடுத்து காயம் அடைந்த ஜெரீனா சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அப்துல்லா ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து யாசின், பர்சானா, ஆதம், ஆமின், அப்துல்காதர், பேகம்பீ, ஆமீனாபீ, பாமிதாபீ ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெரீனா மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  Next Story
  ×