search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஜோலார்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி டிரைவருக்கு கொரோனா

    ஜோலார்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி டிரைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரி டாக்டரின் டிரைவராக பார்சம் பேட்டையை சேர்ந்த (29வயது) வாலிபர் வேலை செய்து வந்தார்.

    கடந்த வாரம் இவரின் உறவினர் ஒருவர் வாலாஜாவில் இறந்து விட்டார். இறுதி சடங்கில் கலந்து கொண்ட டிரைவர் மீண்டும் ஜோலார்பேட்டை வந்துள்ளார்.

    டிரைவருக்கு சென்னையில் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலை சென்னையில் பணியில் சேர டிரைவர் சென்றுள்ளார். அங்கு இவருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

    பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் டிரைவருக்கு போன் மூலம் கொரோனா தொற்று இருப்பதை தெரிவித்தனர்.

    இதையடுத்து டிரைவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் வசித்து வந்த பார்சம்பேட்டை பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைத்து நகராட்சி சார்பில் தூய்மை பணி மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணி இன்று காலை நடைபெற்றது.

    இந்த பணிகளை திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள், நகராட்சி கமி‌ஷனர் ராமஜெயம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பார்சம் பேட்டையில் இயங்கி வந்த 2 டாஸ்மாக் கடைகளும் இன்று முதல் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

    Next Story
    ×