என் மலர்

  செய்திகள்

  இடமாற்றம்
  X
  இடமாற்றம்

  திருப்பூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டத்தில் நீதித்துறை பயிற்சிக்கு செல்லும் தாசில்தார்களுக்கு பதிலாக புதிய தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சில தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் பணியிட மாற்றப்பட்டுள்ளனர்.

  அதன்படி திருப்பூர் வடக்கு முன்னாள் தாசில்தார் ஜெயக்குமார் திருப்பூர் மாவட்ட அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தாராகவும், திருப்பூர் தெற்கு முன்னாள் தாசில்தாராக இருந்த மகேஷ்வரன் திருப்பூர் கோட்ட கலால் அதிகாரியாகவும், திருப்பூர் கோட்ட கலால் அதிகாரியாக இருந்த ரவீந்திரன் திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு தனிதாசில்தாராகவும், திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு தனிதாசில்தாராக இருந்த முருகதாஸ் தாராபுரம் கோட்ட கலால் அதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

  தாராபுரம் கோட்ட கலால் அதிகாரியாக இருந்த ஜெகதீஷ்குமார் திருப்பூர் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராகவும், திருப்பூர் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராக இருந்த சிவக்குமார் திருப்பூர் வடக்கு குடிமைப்பொருள் தனிதாசில்தாராகவும், உடுமலை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக இருந்த கிருஷ்ணவேணி தாராபுரம் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், உடுமலை சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த ஜலஜா உடுமலை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றப்பட்டுள்ளனர்.

  திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலக தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக இருந்த ராஜகுமார் திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், கலெக்டர் அலுவலகத்தில் ஊ பிரிவு தலைமை உதவியாளராக இருந்த ராகவி திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், மடத்துக்குளம் வட்ட வழங்கல் அதிகாரியாக இருந்த கணேசன் உடுமலை சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் பதவி உயர்வு பெற்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.
  Next Story
  ×