search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    களியக்காவிளை சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை

    களியக்காவிளை சந்தை அதே இடத்தில் செயல்பட்டு வந்தது. இங்கு ஏராளமான காய்கறி கடைகள் உள்ளன. மேலும் இறைச்சி மற்றும் மீன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.அந்த கடைகளில் வியாபாரம் செய்யும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    களியக்காவிளை:

    கொரோனா பரவலை தடுக்கும்விதமாக பொது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இந்தநிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களின் மூலம் பலருக்கும் கொரோனா பரவியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் செயல்பட்ட மொத்த மார்க்கெட்டுகள், பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டன.

    குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை அதே இடத்தில் செயல்பட்டு வந்தது. இங்கு ஏராளமான காய்கறி கடைகள் உள்ளன. மேலும் இறைச்சி மற்றும் மீன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.அந்த கடைகளில் வியாபாரம் செய்யும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப் பட்டது. பின்பு அனைவரிடம் இருந்தும் சளி மாதிரியை மருத்துவக்குழுவினர் சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பினர்.

    சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் அப்துல்ஹசீன், விளவங்கோடு தாசில்தார் ராஜ மனோகரன், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ஏசு பாலன் உள்ளிட்டோர் முன்னிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    Next Story
    ×